இலங்கை

அழுத்தங்கள் அதிகரித்தால் பதவியை விட்டு விலகத் தயார்: அமைச்சர் டக்ளஸ்

இந்திய அரசிடமிருந்து இலங்கைக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமானால் எனது அமைச்சர் பதவியை விட்டு விலகி கடலில் போராடுவேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(27.02.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கைக்கான இந்திய தூதுவருடன் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடினோம். நான் நீண்டகாலமாக எதை கூறி வந்தேனோ அதைத்தான் வரலாறும் இன்று ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

நாட்டினுடைய வருங்கால அரசாங்கம் எப்படி இருக்கும், யார் இருப்பார்கள் என்றும் கலந்துரையாடினோம். அதைவிட மிக முக்கியமாக சமீபத்தில் ஜேவிபி கட்சியின் தலைவர் புதுடெல்லிக்கு சென்று இருந்தார். ஆனால் அவர் அங்கு எமது கடல் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எந்த ஒரு கருத்தும் கூறவில்லை” என்றார்.

இதன்போது ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்… தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 108 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. அத்தோடு உத்தியோகத்தர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாசுந்தரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் நடராஜா திருலிங்கநாதன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button