இலங்கை

யாழில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணம், அனலைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 69 கிலோ நிறையுடைய 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்க ப்பட்டுள்ளது.நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும், கடற்பரப்புகளிலும் வழமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதற்கமைவாக வடக்கு கடற்படை கட்டளை பிரிவு யாழ்ப்பாணம், அனலைதீவு கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

இக்குறித்த நடவடிக்கையின் போது கடற்படையினர் கடலோரப் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கிடமான பொதியை மீட்டுள்ளதுடன் அதிலிருந்து 69 கிலோ மற்றும் 05 கிராம் நிறையுடைய 18 கேரள கஞ்சா பொதிகளையும் மீட்டுள்ளனர். கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 27 மில்லியன் ரூபா எனவும் கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை கடற்படை பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Back to top button