இலங்கை

நாட்டில் ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று திங்கட்கிழமை (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது . இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் மொத்த விலை பட்டியல்,
காய்ந்த மிளகாய் கிலோ ரூ.870

வெள்ளை சீனி கிலோ ரூ.265

இறக்குமதி செய்யப்படும் உளுந்து கிலோ ரூ.900

பெரிய வெங்காயம் கிலோ ரூ.320

உருளைக்கிழங்கு கிலோ ரூ.120

பருப்பு கிலோ ரூ.295

Back to top button