இலங்கை

இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் குறைப்பு!

இலங்கையில் மின்சார கட்டணத்தை இன்று முதல்(01.06.2023) நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 14.2 வீதத்தால் இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, வீட்டுப்பாவணையின் 0 முதல் 30 அலகுகளுக்கான மாதாந்திர நுகர்வு கட்டணம் 65 சதவீதம் குறைக்கப்படும் என கூறப்படுகிறது. ஒரு அலகிற்கு 30 ரூபாவில் இருந்து 10 ரூபாய் வரை குறைக்கப்படும். மாதாந்திர கட்டணம் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 60 அலகுகளுக்கு கீழ் உள்ள பிரிவில் ஒரு அலகுக்கான கட்டணம் 42 ரூபாயில் இருந்து 32 ரூபாவாகவும், மாத கட்டணம் 650 ரூபாவில் இருந்து 300 ரூபாவாகவம் குறைக்கப்படும். 91 முதல் 120 அலகுகளுக்கான கட்டணம் 42 ரூபாவில் இருந்து 35 ரூபாவாகவும், மாதாந்த கட்டணம் 1500 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாகவும் குறைக்கப்படும். வழிபாட்டுத் தலங்களுக்கு 16 சதவீதம் கட்டணக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. குறைந்த நுகர்வு கொண்ட மத ஸ்தலங்களுக்கு யூனிட்டுக்கு 10. (ரூ. 30ல் இருந்து ரூ. 10 ஆக குறைக்கப்பட்டது) குறைந்த நுகர்வு கொண்ட மத ஸ்தலங்களுக்கு அலகிற்கு 10 ரூபாய். ( 30 ரூபாவிலுருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டது)

Back to top button