இலங்கை
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

நாட்டில் 2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் (Z -Score ) மறு பரிசீலனைப்புக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த வெட்டுப்புள்ளிகள் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுப்பேறுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
அத்துடன் இதனை பல்கலைக்கழக தெரிவுக்கான பெறுபேறுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://admission.ugc.ac.lk/selection/ பார்வையிடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.