கொடுப்பனவுகள் குறித்து இந்திய மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!
இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியத் தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனமான நெசனல் பேமென்ட் கோர்ப்பரேஷன் ஆகியவை பிற நாடுகளுக்கான வங்கி கொடுப்பனவுகளின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான ஆரம்ப பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இந்தத் தகவலை இந்திய இணைத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு நாட்டில் இருக்கும் ஒருவரிடம் இருந்து மற்றும் ஒரு நாட்டின் ஒருவருக்கு அல்லது வங்கிக்குக் கொடுப்பனவுகளைப் பரிமாறிக்கொள்ளும் தளத்தை உருவாக்குவதே நோக்கமாகும்.
தாய்லாந்து, இலங்கை மற்றும் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவரைக் கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த முனைப்புகளுக்காக இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி மற்றும் வெளியுறவு அமைச்சகம் என்பன இது தொடர்பில் பல நாடுகளை அணுகியுள்ளன. அத்துடன், உரையாடல்கள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன என்றும் இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.