தீபாவளியை முன்னரே கொண்டாடிய ரிஷி சுனக்: வைரலாகும் படங்கள்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளார். தீபாவளி பண்டிகை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை எதிர்வரும் 12 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இவ்விழாவில், இங்கிலாந்தில் வசிக்கும் இந்து சமூதாயத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனர். இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூகவலைத்தளத்தில், புகைப்படங்களை பகிர்ந்து, உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.