சனி வக்ரப்பெயர்ச்சி 2023: சங்கடங்களில் சிக்கும் 6 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/04/Untitled-design-2023-04-04T205446.319-2-780x470.png)
சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி என பல பெயர்ச்சிகளை நாம் சந்தித்து சுப, அசுப பலன்களையும் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். தற்போது குருப்பெயர்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது ஆரம்பித்திருக்கிறது சனி வக்ர பெயர்ச்சி. இந்த சனி பகவானில் பார்வையில் படுபவர்களுக்கு பூர்வபுண்ணிய கணக்குகளின் படி தான் பலன்கள் வழங்கப்படும். இந்நிலையில் தற்போது அடுத்ததாக சனி வக்ர பெயர்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, சனி பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். இவர் ஜூன் 17ஆம் திகதி இரவு 10.48 மணிக்கு கும்ப ராசியில் வக்ரமாகவுள்ளார். பிறகு நவம்பர் 4ஆம் திகதி காலை 8.26 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைந்து விடுவார்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு, வியாபாரம் செய்பவர்களுக்கு பணமுதலீடுகளில் அதிக கவனம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கண்ட சனி காலம் முடிந்து அடுத்து வக்ர பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அதனால் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு அதிக கவனம் தேவை. மேலும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. பண இழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
துலாம்
சனிபகவானின் வக்ர சஞ்சாரம் அவ்வளவு எளிதில் உங்களை விட்டுப் போகாது. அதனால் சனி கொடுக்கும் சில துன்பங்களை தாக்கித்தான் ஆகவேண்டும். அவர் துன்பங்களைக் கொடுப்பது போல உங்களை பாதுகாக்கும் கேடயமாகவும் இருப்பார்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மீண்டும் ஜென்ம சனியாக இருக்கப்போகிறார். ஆனால் குரு உங்களை பாதுகாத்து மன தைரியத்தை கொடுப்பார். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
கும்பராசிக்காரர்களுக்கு சனி பகவானால் பெரும்பாடுதான். அதிக கடன் பிரச்சினையால் அதிகம் அவதிப்படுவார்கள். எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கும். இந்தக் காலக்கட்டத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல வலிகளை சந்திக்க நேரிடும். தொழிலில் அதிக கவனம் தேவை.