இலங்கை
நயினாதீவு நாகபூசணி அம்மன் சிலைக்கு வந்த சோதனை; சுமந்திரனும் நீதிமன்றத்தில் ஆஜர்!
தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதிகோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் 30ற்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளனர்.
அதேசமயம் இந்து அமைப்புகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன், ஸ்ரீகாந்தா, திருக்குமரன் உட்பட மேலும் பல சட்டத்தரணிகளும் இந்து அமைப்புகள் சார்பில் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளனர்.
அதேவேளை தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகள் ஆங்காங்கே அடாத்தாக வைக்கப்பட்டுள்ள நிலையில், தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளமை இந்து மக்கள் மனதில் பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.