ஏனையவை

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் நடிகர் திலகத்தின் மகன்

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன் “சிவாஜி கணேசன்” எனும் நூலை எழுதியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் இந்நூலின் அறிமுக விழா இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில், எதிர்வரும் (23.04.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் நடிகா் திலகத்தின் மகன் ராம்குமார் கணேசன் கலந்துகொள்ளவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தொடக்க உரையை இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் நிகழ்த்துவார்.

அதனைத் தொடர்ந்து “நீங்கா நினைவில் சிவாஜி” என்ற தலைப்பில் பேராசிரியர் சி.சிவலிங்கராஜாவின் சிறப்புரை இடம்பெறும். யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா இந்நூலை வெளியிட்டு வைக்க, ராம்குமார் சிவாஜி கணேசன் நூலின் பிரதிகளை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button