இலங்கை
கொழும்பு: கொச்சிக்கடையில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு கொச்சிக்கடையில் துப்பாக்கிசூடு நடைபெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (2024.02.25) பகல் 2 மணியளவில் கொழும்பு 13 கொச்சிக்கடையில் நபர் ஒருவர்மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார்வண்டியில் வந்த இரு சந்தேக நபர்கள் குறித்த நபரை துப்பாக்கியால் தாக்கி தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிசூடுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அப்பகுதி போலீஸ் அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.