15 அத்தியாவசிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. அத்தோடு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில்.
மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான சுமார் 15 பிரதான அத்தியாவசிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. இருப்பினும் மருந்து தட்டுப்பாடு காரணமாக பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி சிகிச்சைகளை வழங்க முடியாத நிலையேற்பட்டுள்ளது.மேலும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிர்கள் பெரும் ஆபத்தில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிறநாடுலகிடம் இருந்து மருத்துவரீதியான உதவிகள் கிடைத்தபோதும் இலங்கையில் தொடர்ந்து இந்த வலநிலை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.