உடல்நலம்

தலைவலியிலிருந்து விடுபட உடனடி தீர்வாக எளிய வைத்தியம்

அடிக்கடி சிலருக்கு தலைவலி அல்லது தலையிடி ஏற்படும். அப்படியே தலையை கழட்டி வைப்பது போன்று தோன்றும். தலைவலி அவர்களை எளிதில் பலவீனமடையச் செய்து விடும்.

சம அளவு இஞ்சிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது தலைவலியைக் குறைக்கும். இஞ்சி இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்கும். சுக்குப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் பத்து போடலாம். பெப்பெர்மிண்ட் எண்ணெயின் மணம் மூளையின் தசைகளைத் தளர்த்த உதவுகிறது. மூன்று துளி பெப்பெர்மிண்ட் எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெயோடு கலந்து தலையிலும், பின்னங்கழுத்திலும் தடவி தலைவலியில் இருந்து விடைபெறலாம். கிராம்புப் பொடியை முகர்ந்தால் சுறுங்கி இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து தலைவலி சரியாகும். தலைவலி வருவதற்கான அறிகுறி தெரிந்தால் பாதாம் பருப்பை சாப்பிடவும். காலையில் தலைவலியால் அவதிப்பட்டால் ஆப்பிள் துண்டுகளை உப்புடன் சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடிக்கவும், இது தலைவலிக்கு சிறந்த மருந்து. தேன் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டது, அதில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.

Back to top button