அடிவயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க எளிய வழி!
உங்கள் உடல் எடையை குறைப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு ஆரோக்கியமான உணவுகளையும் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தயிரும் அடங்குகின்றது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி உடல் எடையை குறைக்கவும் உங்கள் உடலின் திறனை அதிகரிக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. தயிர் ஒரு சுவையான மூலப்பொருளாக இருப்பதால், மற்ற பொருட்கள் அல்லது உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது, உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்க உதவும்.
அந்தவகையில் தற்போது இதனை எப்படி, எதனுடன் சேர்க்கலாம் என்பதை பார்ப்போம்.
நீங்கள் கஞ்சி, பழக் கிண்ணம், ஸ்மூத்திஸ் போன்றவற்றில் தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். வெறும் தயிரை நன்றாக அரைத்து மென்மையாக்கி, அதில் சில சியா விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.
உங்களுக்கு பிடித்த பழங்களை துண்டுகளாக வெட்டி தயிரை அதில் சேர்க்கவும். ஆப்பிள், கிவி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, தர்பூசணி போன்றவை நீங்கள் தயிரில் சேர்த்து சாப்பிடலாம். இது எடை இழப்புக்கு சிறந்த உணவாகும்.
தயிருடன் தேன், பழம், சணல் விதைகள் மற்றும் சியா விதைகளை சேர்த்து சாப்பிடலாம். இது எடை இழப்புக்கு நன்மை தரும்.
தயிருடன் சேர்த்து உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களை சேர்த்து சாப்பிடுங்கள். பேரீச்சம்பழம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிற உலர் பழங்களைச் சேர்ப்பது நல்லது.
ஓட்ஸிடன் தயிர் கலந்து நீங்கள் சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது.