ஏனையவை

75 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த அக்கா- தம்பி: நெகிழ்ச்சியான பின்னணி கதை

இந்தியா – பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டு பிரிந்த போது பஞ்சாப்பை சேர்ந்த சர்தார் பஜன் சிங்கின் குடும்பம் பிளவுபட்டது. அஜீஸ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இடம்பெயர்ந்து விட்டார் ஆனால் அவரது மற்ற குடும்ப உறுப்பினர்கள் சர்தார் பஜன் சிங்கின் மூத்த மகள் மகேந்திர கவுர் உள்பட மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்தியாவின் பஞ்சாப்பிலேயே இருந்துள்ளனர்.

அத்துடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இடம்பெயர்ந்த அஜீஸ் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் அஜீஸ் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார் ஆனால் எதுவும் கைக்கூடவில்லை. காலமும் அப்படியே உருண்டோடி 75 ஆண்டுகள் ஆனது.

இதேவேளை, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது மகேந்திர கவுரும், ஷேக் அப்துல்லா அஜீஸு ம் பிரிந்துபோன செய்தி அண்மையில் சமூகவலைதளங்களில் வெளியாகியிருந்தது. நாட்டு எல்லையில் பிரிந்த அக்கா- தம்பி உறவு இந்த செய்தி எப்படியோ மகேந்திர கவுரும், ஷேக் அப்துல்லா அஜீஸு மின் செவிக்கும் செல்ல இவர்கள் இருவரும் 75 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்பிறகு இவர்கள் இருவரும் பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ள குருத்வாராவில் சந்தித்துக் கொண்டனர். அஜீஸ் தனது அக்கா மகேந்திர கவுரை பார்த்து கண்ணீரில் வரவேற்ற காட்சி அங்கு கூடியிருந்தோரை அழவைத்துள்ளது.

இந்நிலையில், எப்படியோ அக்காவும் தம்பியும் சந்தித்து ஒன்றாக உணவருத்தி பழைய நினைவுகளை மீட்டியிருக்கிறார். இவ்வாறு 75ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொண்ட அக்கா – தம்பியின் பாசப் பிணைப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகின்றது.

Back to top button