உடல்நலம்

விட்டமின் ஏ குறைபாட்டை காட்டும் ஆறு அறிகுறிகள்: உங்களுக்கு இருக்கா?

நமது உடலின் செயற்பாட்டிற்கு பல வகையான சத்துக்கள் தேவைப்படுகிறது.

இந்த செயற்பாடுகள் சீராக நடைபெற வேண்டுமானால் அதற்கு நமக்கு வைட்டமின்களும் தாதுக்களும் நிறைவாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் வைட்டமின் சத்துக்கள் உடலுக்கு தேவைப்படும் ஒரு நுண் சக்தி என்றே சொல்லலாம்.வைட்டமின்களில் பல சத்து வகைகள் காணப்டுகினறன.

அந்த வகையில் வைட்டமின் ஏ சத்து குறைந்தால் உடலில் காட்டும் அறிகுறிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிகுறிகள்
1.வைட்டமின் ஏ சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுப்பதில் சிறந்த பங்காற்றுகிறது.இந்த சத்து உடலில் குறைவாக இருந்தால் அது சருமத்தில் வீக்கம், அரிப்பு, எரிச்சல் மற்றும் அதிகப்படியான வறட்சியை உண்டாக்கும்.

உங்களுக்கு எப்பவும் இல்லாமல் திடீரென்று சரும வறட்சி ஏற்பட்டால் அதற்கு காரணம் வைட்டமின் ஏ குறைபாடுதான்.

இதனால் உங்ககுக்கு எக்ஸிமா வருவதற்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நாடுங்கள்.

2.உங்கள் கண்கள் கூர்மையான மிகவும் தெளிவான பார்வைத்திறனை கொண்டிருக்க வேண்டும். சிறந்த கண்பார்வைக்கு வைட்டமின் ஏ சத்து மிகவும் அவசியமாகும்.

இந்த சத்து உடலில் குறையும் போது கண்பார்வையை இழக்கலாம். மற்றும் மாலைக்கண் நோய், உலர் கண் நோய்க்குறி போன்றவை வரலாம்.

3.குழந்தைகள் சிறுவயதில் நன்றாக வளர்ச்சி அடைய வேண்டும்.அவர்களுக்கு வைட்டமின் ஏ குறைவாக இருந்தால் அவர்களின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

இவ்வாறு வளர்ச்சி குன்றி காணப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் அவர்கள் வைட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4.நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படத்த கூடிய வைட்டமின் என்றால் அது வைட்டமின் ஏ தான்.

அந்த வகையில் உடலில் வைட்டமின் ஏ குறையும் பட்சத்தில் உங்களுக்கு அடிக்கடி ஒரு நோய் வந்துகொண்டே இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அது வைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறியாகும்.

5.வைட்டமின் ஏ குறைபாடு உள்ளவா்கள் எப்போதும் ஒரு சோர்வுத்தனத்துடனும் மற்றும் களைப்பு மந்தக்குணம் போன்றவற்றிற்கு இது வழிவகுக்கும்.

இதபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் வைத்தியரை நாடுவது அவசியம்.

மற்றும் காரணம் இல்லாமல் உடலின் எடை குறைய ஆரம்பிக்கும் இது ஆரோக்கியம் இல்லாத உடல் இழப்பாகும் எனவே நீங்கள் மருத்துவரிடம் முறையான ஆலோசனை எடுக்க வேண்டும்.

Back to top button