உடல்நலம்

நாம் தேங்காய் பூ சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம் என்ற கேள்விக்கு பதில் நல்ல விடயமாக தான் அமையும். நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விடயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும்.

ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. நன்கு முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைத்து, 3 அல்லது 4 மாதங்கள் பின்னர் முளைவிட்டதும் அதன் உற்பகுதியில் உள்ள பூ தான் தேங்காய் பூ ஆகும். தேங்காயைவிடவும் தேங்காய் பூவில் தான் அதிக சத்து காணப்படுவதாக கூறுகின்றனர். அவை எவை என்று பார்க்கலாம்,

நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
செரிமான கோளாறுகளை குணமாக்கும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
புற்று நோய் வராமல் தடுக்கும்.
தைராய்டு சுரப்பை குணமாக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சிறுநீரக பிரச்சினைகளை சீராக்கும்.
மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும்.
உடல் எடையை குறைக்கும்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


இந்த தேங்காய் பூவை எங்கு கிடைத்தாலும் உண்ணுதல் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button