உடல்நலம்

ஒரு கப் ரசம் தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா!

பலரின் வீட்டு சாப்பாட்டில் கட்டாயம் இருக்கும் உணவில் ரசமும் ஒன்று..!

ரசம் சாதம் சாப்பிடுவதும், ரசத்தை வெறுமனே குடிப்பதும் பலருக்கும் பிடித்த விடயம் என கூறினால் அது மிகையாகாது..!

அத்தகைய ரசத்தை அன்றாடம் சிறிது உணவில் சேர்த்துக் கொள்வதால் நன்மைகள் பல கிடைக்கின்றன.

வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியது ரசம்.

ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான்.

மலச்சிக்கல்

ரசத்தை அன்றாடம் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ரசத்தில் முக்கியமான வைட்டமின்களான ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் தியாமின் போன்றவைகள் அதிகம் நிறைந்துள்ளது.

காய்ச்சல்

ரசத்தில் உள்ள மசாலாப் பொருட்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிபிரைடிக் பண்புகள் பொதுவான காய்ச்சல் மற்றும் சளிக்கு சரியான மருந்தாக அமைகிறது.

ரசத்தில் உள்ள புளியில் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் (HCA) உள்ளது. இது எடை குறைக்க உதவுகிறது. இது உடலில் கொழுப்பைச் சேமிக்கும் என்சைம்களைத் தடுக்கிறது.

Back to top button