இந்த பொருட்களை இரவில் ஊறவைத்து வெறும் வயிற்றில் எடுப்பதால் இத்தனை நன்மைகளா!

நாம் பொதுவாக பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் வேர்க்கடலை போன்ற நட்ஸ்களை சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. இதில் பி-வைட்டமின்கள், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை இதில் அடங்கியுள்ளது. குறிப்பாக இந்தக் நட்ஸ்களை ஊறவைத்து சாப்பிடும்போது ஊட்டச்சத்துக்கள் உடலால் நன்றாக உறிஞ்சப்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதன்படி இவற்றை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது இன்னும் நன்மையே.
ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது PCOS, முகப்பரு போன்றவற்றிலிருந்து விடுபட்டு, பளபளப்பான சருமத்தை அடைய 5-7 பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து, காலையில் தோலை நீக்கி, தினமும் உட்கொள்ள வேண்டும்.
.மாதவிடாய் வலி மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு, 6-8 ஊறவைத்த திராட்சை மற்றும் 2 கேசரை இரவில் ஊறவைத்து, அதனை மறுநாள் காலையில் உட்கொள்ளலாம்.
முடி உதிர்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்சனைகளுக்கு, கருப்பு திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுங்கள்.
இரண்டு அக்ரூட் பருப்புகளை இரவில் ஊறவைத்து, காலையில் உட்கொண்டால் மூளையின் சக்தி, நினைவாற்றல் மற்றும் செறிவு அதிகரிக்கும்.
2 டீஸ்பூன் பாசிப்பயிறை தினமும் இரவில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வர முடி, தசை ஆரோக்கியம் மற்றும் நல்ல சருமம் கிடைக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு மலச்சிக்கலைப் போக்க இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும்