பித்த வெடிப்பு குணமாக சில கை வைத்திய குறிப்புக்கள்…!
உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு உண்டாகும். பித்த வெடிப்பு குணமாக சில கை வைத்திய குறிப்புக்களை இங்கு பார்க்கலாம்.
நன்னாரிவேர் 10 கிராம் உடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அரை டம்ளராக குறைந்ததும் வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதில் பனங்கல்கண்டு சேர்த்து குடித்து வந்தால் பித்தவெடிப்பு மறைந்துவிடும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.
பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும்.
வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பித்தவெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.
கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பித்தவெடிப்பு உள்ள பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும்.
உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு பின்பு இக்கலவையைப் பூசி வர வெடிப்பு நீங்கும்.
குறிப்பு : எந்தவொரு மருத்துவத்தினையும் நம்பகமான மருத்துவருடன் கலந்தாலோசித்து எடுத்துக்கொள்வது சிறந்தது.