இலங்கை
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக அதிகளவு நீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயது வந்தவர்கள் சுமார் 3 லீற்றர் நீரையும், சிறுவர்கள் சுமார் ஒன்றரை லீற்றர் நீரையும் பருக வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சர்வதேச விஞ்ஞான ஆய்வகத்தின் போசனை பிரிவு பிரதானி வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
நீர் அதிகளவில் பருகாமையினால் பல்வேறு நோய் நிலைமைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். நீருக்கு மேலதிகமாக தர்பூசணி, தோடம்பழம் போன்ற பானங்களையும் பருக முடியும். கடும் வெயில் நிலைமையினால் வெளியிடங்களில் அதிகளவில் நேரத்தை செலவிட வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.