இலங்கை
கொழும்பில் நாளை முதல் பிறப்பிக்கப்படவுள்ள விஷேட போக்குவரத்து திட்டம்

2023 ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரை முன்னிட்டு கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதன் காரணமாக மைதானத்தை சுற்றி விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, போட்டிகள் நடைபெறும் எதிர்வரும் 9, 10, 12, 14, 15 மற்றும் 17 ஆம் திகதிகளில் ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றியுள்ள சில வீதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போட்டி நடைபெறும் நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.