இலங்கை

யாழ். புளி வாழைப்பழத்திற்கு வெளிநாடொன்றில் ஏற்பட்டுள்ள கிராக்கி

யாழில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட இயற்கை புளி வாழைப்பழங்களின் முதல் தொகுதியை ஏப்ரல் 28 ஆம் திகதி டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஒவ்வொரு வாரமும் துபாய் சந்தைக்கு தலா 25,000 கிலோ ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ராஜாங்கனில் விளையும் புளி வாழைப்பழங்கள் 18 முறை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button