ஆறு மாத கைக்குழந்தையை அடித்துக் கொன்ற தாய்; விசாரணையில் அம்பலமான தகவல்கள்
ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தில் ஒரு ஆறு மாத கைக்குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பாக ஊருபொக்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய் 21 வயதான பெண்ணாகும். அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.குழந்தை ஏன் கொலை செய்யப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஊர் பொக்க கட்டுவன மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் இலங்கையில் குழந்தை வன்கொடுமையின் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தை வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 30 ஆம் திகதி தாயார் குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தபோது வளர்ப்பு நாய் தாயின் காலை பிடித்து இழுத்ததில் குழந்தையின் தலை சுவரில் மோதியதாக கூறப்படுகிறது.இதனை குழந்தையின் தாயார் கவணனுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
குழந்தைக்கு ஏற்பட்ட தலை வலி காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றபோது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.இதனையடுத்து குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயத்தில் சந்தேகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையின் மரணத்திற்கு அவரின் தாய் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழும்பியுள்ளன.
இதனையடுத்து மேலதிக விசாரணைககளை ஊருபொக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்