இலங்கை

அதிபர் மீது மாணவன் தாக்குதல் – வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் பாடசாலை ஒன்றின் அதிபர் மீது உயர்தர மாணவன் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த உயர்தர மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற நேற்றைய தினம் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு மாணவர்கள் எவ்வாறு சமூகமளிக்க வேண்டும் என்பது தொடர்பிலும், மாணவர்களது ஒழுக்கம் தொடர்பிலும் அதிபர் மற்றும் ஆசிரியர்களர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலையால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி பாடசாலை மாணவர்களின் ஒழுக்க நடைமுறைக்கு மாறாகவும், காதில் தோடு அணிந்தவாறும் மாணவன் ஒருவர் குறித்த நிகழ்விற்கு சமூகமளித்திருத்துள்ளார் . குறித்த மாணவனை அணிந்திருந்த தோட்டினை கழற்விட்டு மாணவர்களின் ஒழுக்கத்துடன் வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற மாணவன் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகை தந்து நிகழ்வு மண்டபத்தில் அதிபர், விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமர்ந்திருந்த போது அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதன்போது அங்கு விருந்தினராக கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த அதிபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தையடுத்து அங்கு சென்ற பாடசாலை பழைய மாணவர்கள் குறித்த மாணவனைப் பிடித்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிசார் இது தொர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பிறிதொரு நகரப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற உயர்தர மாணவர் ஒன்று கூடலின் போது மாணவர்கள் மோட்டர் சைக்கிள் மற்றும் கார்களுடன் பாடசாலை வளாகத்திற்குள் அதிக ஒலி எழுப்பி அசௌகரியத்தை ஏற்படுத்தியமையால் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் சிலர் வெளியேறிச் சென்றிருந்தமையும் குறிப்படத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button