இங்கிலாந்து விசா கட்டண உயர்வால் அதிர்ச்சியில் மாணவர்கள்!

இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளதாக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசாக்களின் கட்டணம் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு 15 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.1540) உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர் விசாவிற்கு 127 பவுண்டுகள் (ரூ.13 ஆயிரம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டு களாகவும் (ரூ.50 ஆயிரம்), சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் (ரூ.12 ஆயிரம்) கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்படி, வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் 15 சதவீதமும், முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது வருகின்ற அக்டோபர் மாதம் 4 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.