ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

தொழிலில் வெற்றி; இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் தை மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.02.2024. சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.36 வரை நவமி. பின்னர் தசமி. இன்று அதிகாலை 03.42 வரை விசாகம். பின்னர் அனுஷம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம்
எடுத்த வேலையை முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வெளியூர் பயணங்களை ஒத்தி போடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். சாலை சந்திப்புகளைக் கவனமாகக் கடந்து செல்லுங்கள். நெருங்கிய உறவாக இருந்தாலும் அவசரப்பட்டு கடன் கொடுக்காதீர்கள். சந்திராஷ்டமம் நாள் எச்சரிக்கை தேவை.

ரிஷபம்
ரிஷபம்
வீட்டில் மங்கள நிகழ்ச்சிக்கு உறவினர்களை அழைப்பீர்கள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்வீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள பொதுச் சேவையில் இறங்குவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடத்த ஏற்பாடு செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கத்தை பேசி தீர்ப்பீர்கள்.

மிதுனம்
மிதுனம்
உங்கள் தொழிலுக்குத் தேவையில்லாத எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளைக் கடந்து வருவீர்கள். அரசாங்க வேலையில் பங்கெடுப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களை கவர்ச்சியான பேச்சால் பெறுவீர்கள். உடல் ரீதியான பாதிப்புகளை மருத்துவ சிகிச்சையால் தீர்ப்பீர்கள். நீண்ட காலமாக வராத கடன்களை வசூல் செய்வீர்கள்.

கடகம்
கடகம்
கொழுந்தியாளால் குடும்பத்தில் சலசலப்பை சந்திப்பீர்கள். தேவையில்லாத பஞ்சாயத்துகளில் இறங்காதீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள். காதலியுடன் உல்லாச பயணம் செல்வீர்கள். வருமானத்திற்கு அதிகமாக செலவுகள் வந்து திணறுவீர்கள். வியாபாரத்திற்கு ஏற்படும் இடையூறுகளால் விசனப்படுவீர்கள்.

சிம்மம்
சிம்மம்
தொட்ட காரியங்களில் எதிர்ப்பு இன்றி ஏற்றம் காண்பீர்கள். வியாபாரத்தை அதிகரிக்க திட்டங்கள் தீட்டி வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு பெறுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் பெறுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். தாயார் வகை சொத்துப் பிரச்சனையை தீர்ப்பீர்கள்

கன்னி
கன்னி
குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடினமாக உழைப்பீர்கள். சகோதர வகையில் தேவையில்லாத செலவால் கடன் வாங்குவீர்கள். சகோதரிக்கு திருமண ஏற்பாடுகள் செய்வீர்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரித்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். தொழில் துறையில் கவனமுடன் நடந்து மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள்.

துலாம்
துலாம்
ஏற்றுமதி இறக்குமதி தொழிலை லாபகரமாக நடத்துவீர்கள். போட்டி பந்தயங்களில் துணிந்து ஈடுபடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அனுகூலம் அடைவீர்கள். கட்டுமானத் தொழிலில் வருமானத்தை பெருக்குவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக நடக்கும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து முக்கிய திட்டங்கள் தீட்டிச் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்
அடுத்தவர் பேச்சைக் கேட்டு பைனான்சில் பணம் போடாதீர்கள். வியாபாரம் சுமாராக நடக்கும். தொழில் துறைகள் மந்தமான நிலையில் காணப்படும். நட்பு வட்டத்திலிருந்து உதவி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவீர்கள். உறவினர்களால் உருவாகும் சிக்கலை சமாளிப்பீர்கள். அதே நேரத்தில் குடும்ப பிரச்சனையால் தூக்கத்தை தொலைப்பீர்கள்.

தனுசு
தனுசு
வேலை இடத்தில் வீண் பழியைச் சுமக்க வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். கொடுத்த இடத்தில் கடனைத் திரும்ப பெற சிரமப்படுவீர்கள். வங்கியில் வட்டி கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். வீட்டுச் செலவுக்காக உறவினர்களின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருக்கும். பண வரவு சுமாராகவே நடக்கும். எதிலும் கவனமாக செயல்பட்டு பாதிப்பை குறைப்பீர்கள்.

மகரம்
மகரம்
வியாபாரத்தைக் குதூகலமாக நடத்துவீர்கள். தொழில் துறைகளில் இருந்த போட்டிகளை சமாளிப்பீர்கள். சிக்கனத்தைக் கடைபிடித்து தேவையில்லாத செலவுகளைக் குறைப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கு சில உதவிகளை நண்பருக்குச் செய்வீர்கள். கமிஷன் வியாபாரம் உரிய நேரத்தில் கை கொடுக்கும். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடாதீர்கள்.

கும்பம்
கும்பம்
கல்விக் கட்டணம் கட்ட இயலாத ஒருவருக்கு உதவி செய்வீர்கள். பங்குச்சந்தையில் கணிசமாக முதலீடு செய்வீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அமோக வருமானம் பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். பணியிடத்தில் பளிச்சென்று வேலை செய்து பாராட்டுப் பெறுவீர்கள். குழப்பங்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.

மீனம்
மீனம்
குடும்பத்துடன் சென்று ஆலய தரிசனம் செய்வீர்கள். பெரியோர்களின் நல்லாசியால் இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வீர்கள். உங்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு மனைவி பிள்ளைகள் நடப்பதால் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். நண்பராக இருந்தாலும் அறிவுரைகள் சொல்லாதீர்கள்

Back to top button