உடல்நலம்

இளைத்த உடல் வலிமை பெற சூப்பரான உணவு

ஜவ்வரிசியில் முழுக்க முழுக்க கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.

இது மிக எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளில் ஒன்று. அதனால் ஜவ்வரிசியில் செய்த உணவுகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

அதிக ஆற்றலைத் தரக்கூடிய ஜவ்வரிசியை உணவில் எடுத்து கொண்டால் அது உடலுக்கு என்னென்ன நன்மைகள் தருகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜவ்வரிசி
ஜவ்வரிசியில் அதிகமான கலோரிகளும் கார்போஹைட்ரேட்களும் நிறைந்து உள்ளன. ஆனால் கனிமங்கள் வைட்டமின்கள் கால்சியம் இரும்புச்சத்து நார்ச்சத்து போன்ற சத்துக்கள் குறைவாகவே காணப்படுகிறது.

இதன் காரணமாக மாவுச்சத்து அதிகம் தேவைப்படுபவர்கள் ஜவ்வரிசியை உணவில் காய்கறி, பருப்புகள் சேர்த்து உண்ணலாம். இவ்வாறு காய்கறிகளுடன் சேர்த்து உண்பதால் முழுமையான ஊட்டச்சத்தை எம்மால் பெற முடிகிறது.

  1. மெலிந்த உடலமைப்பை கொண்டவர்கள் கண்டிப்பாக ஜவ்வரிசியை எடுத்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் ஜவ்வரிசியில் அதிக கார்போஹைட்ரேட்கள் உள்ளது.

இதில் அதிகளவு மாவுச்சத்து இருப்பதால் உடல் எடையை விரைவாக பெற்று கொள்ளலாம். இதனால் தான் விரத காலங்களில் அதிகமானோர் ஜவ்வரிசியை உணவாக எடுத்து கொள்கினறனர்.

விரத காலங்களில் ஏற்படும், அசதி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி போன்றவற்றை தடுக்கிறது.

  1. வயிற்றுப்புண் பிரச்சனை இருப்பவர்கள் ஜவ்வரிசியை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதனால் குடலும் பாதகாக்கப்படுகிறது. உடலை குளிர்ச்சியடைய செய்கிறது.

குடலில் ஒரு விதமான வழவழப்புதன்மையை உண்டாக்கி குடல் எரிச்சலில் இருந்து பாதுகாக்கிறது. காபி டீ அதிகமாக குடிப்பவர்கள் இந்த ஜவ்வரிசியை எடுத்து கொண்டால் அவர்களுக்கு பித்தம் சேராமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையில்லாத செல்களின் உருவாக்கத்தை தடுக்கும். எலும்புகள் வலுவடைந்து மூட்டுவலி அபாயத்தை போக்குகிறது.

3.நீரழிவு நோய் இருப்பவர்கள் இந்த ஜவ்வரிசி உணவை தடுக்க வேண்டும். இதன் காரணம் இதில் அதிக மாவுச்சத்து நிரம்பி இருப்பதால் ரத்தத்தில் சக்கரை அளவை அதிகரிக்கும்.

பெண்கக்கு ஜவ்வரிசி மிகவும் நல்லது.மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த ஜவ்வரிசி தடுக்கிறர்து. இதை மாதவிடாய் வரும் முன்னர் உண்பது மிகவும் நல்லது.

இந்த நேரத்தில் ஏற்படும் கூடுதல் ரத்த போக்கை இந்த ஜவ்வரிசி சரி செய்கிறது. இதில் வைட்டமின் B6, ஃபோலேட் சத்துக்கள் உள்ளதால் இது கருவளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது.

மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.

Back to top button