உடல்நலம்

உடலிலுள்ள எலும்புகளை வலுவாக்கும் சூப்பர் ஜூஸ்கள்

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கத்தால், இளைஞர்களுக்கு கூட எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உணவில் கால்சியம் நிறைந்த உணவுகள் இல்லாததாலும், வைட்டமின் டி இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைகின்றன. உணவில் கால்சியம் நிறைந்த உணவுகள் இல்லாததாலும், வைட்டமின் டி இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைகின்றன. எலும்புகள் பலவீனமடைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுகிறது. அதனால் லேசாக அடிப்பட்டால் எலும்பு முறியும் அபாயம் உள்ளது. எலும்பை வலுவாக்க சில ஜீஸ்கள் அருந்துவதும் நல்ல பலனைத் தரும்.

தீராட்சை ஜீஸ் திராட்சையில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளின் கொலாஜன் உருவாவதற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் சி மற்றும் கால்சியம் போதுமான அளவு திராட்சைகளில் காணப்படுகின்றன. எனவே, திராட்சை ஜூஸ் குடிப்பதால் எலும்புகள் வலுவடைவதோடு, வேறு பல நன்மைகளும் கிடைக்கும்.

ஆரஞ்சு ஜீஸ் ஆரஞ்சு சாற்றில் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் டி போதுமான அளவில் காணப்படுகிறது. இது தவிர வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை ஆரஞ்சு சாற்றில் போதுமான அளவு காணப்படுகின்றன. இது எலும்புகளை வலுவாக்கும்.

பச்சை இலை காய்கறிகளின் ஸ்மூத்தி பச்சை இலைக் காய்கறிகளில் போதுமான அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. எனவே, கீரை, வெந்தயக்கீரை போன்ற காய்கறிகளின் ஸ்மூத்திக்களை உட்கொள்வது எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.பச்சை இலை காய்கறிகளின் ஸ்மூத்தி குடிப்பதால் உங்கள் எலும்புகள் வலுவடைவதோடு, எலும்பு அடர்த்தியும் அதிகரிக்கிறது.

Back to top button