ஏனையவை

தித்திப்பான சுவையில் வெறும் 5 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ்!

மாலை வேளைகளில் பொதுவாகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். அதிலும் இனிப்பாக ஏதாவது செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். தினமும் டீயுடன் பிஸ்கட் என்று சாப்பிடுவதற்கு பதிலாக வெறும் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பொருளை செய்து சாப்பிட்டு பாருங்க. ஆகவே முதலில் அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்யலாம் என விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

வெல்லம் – 200g

தண்ணீர்

அரிசி மா – 200g

மைதா மா – 100g

உப்பு – தேவையானளவு

ஏலக்காய் பவுடர் – 1/4 தே.கரண்டி

பேக்கிங் சோடா – 1/4 தே.கரண்டி

நெய்

செய்முறை

முதலில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கலந்து பாகு பதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரிசி மா, மைதா மா, உப்பு, ஏலக்காய் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

அடுத்ததாக கலந்து எடுத்துக்கொண்ட கலவையுடன், கரைத்து வைத்த வெல்லத்தை சேர்த்த தண்ணீர் சேர்க்காமல் குளிப்பனியாரத்திற்கு போன்று கலந்து எடுத்துக்கொள்ளவும்.

இறுதியாக குளிப்பனியார பாத்திரத்தில் நெய் ஊற்றி, இதை வேக வைத்து எடுத்தால் சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி!

Back to top button