இலங்கை

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் நிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள்

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணர் இல்லாத காரணத்தினால் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினையால் அப்பிரதேச மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் சத்திரசிகிச்சைக்காக காலி மாத்தறை வைத்தியசாலைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் முறையாக அறிவிக்காமல் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இதன் காரணமாக வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.” என தெரிவித்தார். மேலும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி உடனடியாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மயக்க மருந்து நிபுணரை வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Back to top button