Tag: கொரோனா வைரஸ்

  • இந்தியாவில் தொடர்ந்து வீழ்ச்சியடையும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

    இந்தியாவில் தொடர்ந்து வீழ்ச்சியடையும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

    இந்தியாவில் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தொற்றால் புதிதாக 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. நேற்று முன்தினம் 228 ஆக இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 214 ஆக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் இன்றும் பாதிப்பு குறைந்துள்ளது. இதேவேளை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து…

  • சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபுகள் இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றன – நீலிக மாலவிகே

    சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபுகள் இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றன – நீலிக மாலவிகே

    சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபு இலங்கையில் பல மாதங்களாக உள்ளது என்று பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

  • வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த 124 பயணிகளுக்கு கொரொனா தொற்று

    வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த 124 பயணிகளுக்கு கொரொனா தொற்று

    பரிசோதனை மேற்கொண்டதில், 124 பயணிகளுக்கு கொரொனா வைரஸ் பாதிப்பும், 40 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

  • டெல்லியில் பெரும் பரபரப்பு

    டெல்லியில் பெரும் பரபரப்பு

    உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த ஒருவர் தாஜ்மஹாலை சுற்றி பார்ப்பதற்காக இந்தியா வந்துள்ளார். அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த பயணி மாயமாகிவிட்டார். இதனால் மாயமான பயணியை டெல்லி சுகாதாரத்துறையினர்…

  • சீனாவில் அதிகளவில் பெருகிவரும் கொரோனா வைரஸ்

    சீனாவில் அதிகளவில் பெருகிவரும் கொரோனா வைரஸ்

    சீனாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள இந்திய மருந்துகளை சீனர்கள் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் தினமும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் 5000 வரை உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சீனாவில் கொரோனா மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை வாங்குவதற்கு சீனர்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து மலிவான விலையில் கொரோனா…

  • வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு

    வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு

    சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர்…