இலங்கை

கல்வி அமைச்சு விசேட பாடசாலை விடுமுறை குறித்து வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கை முழுவதும் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (12.11.2023) ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை காரணமாக இன்று அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பல தரப்பினரிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் இன்று வழங்கப்பட்ட விடுமுறைக்கு பதிலாக நவம்பர் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏனைய பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Back to top button