இலங்கை
அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ள தேஜ்!
தென்மேற்கு அரபிக்கடலில் ‘தேஜ்’ புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக தேஜ் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதேவேளை மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக இன்று முதல் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும் நேற்று அறிவித்திருந்தது.
எனவே, கடலில் பயணம் செய்வோரும், கடற்தொழிலாளர்களும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.