இலங்கை

மட்டக்களப்பில் பயங்கர விபத்து சம்பவம்: மத குருமார்களுக்கு நேர்ந்த நிலை!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் மத குருமார்கள் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தியில் நேற்றையதினம் (26-02-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவதும், வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பும் வழியில் மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி எதிரே வந்த கனரக வாகனமும் மோதியதால் இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கிரானைச் சேர்ந்த இரு மத குருமார்களே இவ்வாறு விபத்திற்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய, கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

Back to top button