ஆன்மிகம்

நாம் ஆடி மாதத்தில் அம்மனை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

பொதுவாக ஆடி மாதம் வந்துவிட்டாலே அடுத்தடுத்து தெய்வீக பண்டிகைகள் வர ஆரம்பித்து விடும். ஆடி மாதத்தில் ஏன் அம்மனுக்கு மட்டும் இந்த அளவுக்கு விசேஷம் என்றால், ஆடி மாதத்தில் சிவனை விட அம்மனுக்கு சக்தி அதிகம். மேலும், ஆடி மாதத்தில் சிவன் சக்திக்குள் அடக்கமாகிடுவார். ஆடி மாத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி ரொம்ப விசேஷமாக பார்க்கப்படுகிறது. இந்த கிழமைகளில் பக்தர்கள் அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். சிலர் பொங்கல் வைத்து தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டிக்கொள்வார்கள். ஆடி மாதத்தில் நல்ல மழை வேண்டி பக்தர்கள் அம்மனுக்கு வழிபாடு செய்வார்கள். மேலும், அம்மனுக்கு பிடித்த வேம்பு, எலுமிச்சை, கூழ் செய்து அம்மனுக்கு படைப்பார்கள். அம்மனுக்கு படைத்து கூழை பக்தர்கள் வழங்குவார்கள். ஆடி மாதத்தின் சிறப்புகள் ஆடி மாதத்தின் சிறப்பே செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமையும் தான்.

ஆடி மாதத்தில் அம்மனை வணங்கும் முறை

அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் கூழ் காய்ச்சி படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கினால் உங்ளுக்கு செல்வ செழிப்பு பெருகும்.

ஆடி மாதத்தில் வீட்டில் ஐந்து முக தீபம் ஏற்றி அம்பிக்கையை வழிபாடு செய்து வரலாம்.

ஆடி மாதத்தில் மங்கரமான பொருட்களை தானம் வழங்கினால் துன்பம் நீங்கும்.

ஆடி வெள்ளியில் ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

இதனால், ராகு தோஷம் நீங்கும். விரைவில் திருமணம் நடைபெறும்.

Back to top button