இலங்கை
இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

இலங்கையில் இன்று (13.09.2023) பதிவாகியுள்ள அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் கொள்விலை 317.54 ரூபாவாகவும், விற்பனை விலை 328.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதியானது 393.13 ரூபாவாகவும், விற்பனை பெறுமதியானது 410.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை குவைட் தினாரின் பெறுமதி 1046.75 ரூபாவாகவும், கட்டார் ரியாலின் பெறுமதி 88.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
