இலங்கை

நாட்டில் மீண்டும் மரக்கறி விலைகளில் ஏற்பட்ட மாற்றம்!

நேற்று செவ்வாய்க்கிழமை முதல் (23) பிலியந்தலை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன . இதன்படி , ஒரு கிலோ பீட்ரூட்டின் மொத்த விலை 1000 ரூபாவாகவும் ஒரு கிலோ கறிமிளகாயின் மொத்த விலை 1,200 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

கடந்த சில நாட்களாக 2800 ரூபாவாக உயர்ந்திருந்த ஒரு கிலோ கேரட்டின் மொத்த விற்பனை விலை நேற்று 1180 முதல் 1400 ரூபா வரை குறைந்துள்ளது. ஆனால், புடலங்காய் , பீர்க்கங்காய் , வெண்டிக்காய் போன்றவற்றின் மொத்த விலை 500 முதல் 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.

அதேவேளை மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளி 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் நுவரெலியா மற்றும் பிலியந்தலை விசேட பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

Back to top button