இலங்கை
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

மாணவர்களின் பாடசாலை பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. புத்தகப் பையின் எடையால் மாணவர்களுக்கு ஏற்படும் முதுகெலும்பு கோளாறு போன்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு நடவடிக்கையாக தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை பகுதிகளாக பிரித்து அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பதற்கு மாற்றாக, மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களைத் தவிர்த்து, பள்ளிக்குக் கொண்டு வரப்படும் பாடப்புத்தகங்களின் அளவைக் குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.