வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!
நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் 20ம் திகதி பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது. தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற அனைத்த்க்கட்சி கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டு சம்பவம் யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டு சம்பவம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.
கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிக இதில் கல்லந்துகொண்டிருந்தனர்.