இலங்கை

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்!

இலங்கையில் 12 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இம்மாதம் முதல் , இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும், அடுத்த மாதம் வாடிக்கையாளர் பெறும் மின் கட்டண பட்டியலில் புதிய வரியும் உள்ளடக்கப்படும் எனவும் மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சார சபையால் வழங்கப்படும் மின்சார கட்டண பட்டியல்களில் குறித்த வரி இதற்கு முன்னர் இருந்தே சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டம் இல் காணப்பட்ட குறைப்பாடு காரணமாக, அது லெகோ மின்சார பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை. அதேவேளை லெகோ அல்லது இலங்கை மின்சார தனியார் நிறுவனம் சுமார் 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button