இலங்கை

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் 04 ஆண்டுகளுக்கு (2027 டிசம்பர் 31) நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு இன்று (19.07.2023) தீர்மானித்துள்ளது. இச்சலுகை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது. புதிய ஜிஎஸ்பி பிளஸ் முறைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் அதேவேளையில் இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை கட்டணச் சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 3.2 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்துள்ளதாக இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Back to top button