அகில இலங்கை ரீதியில் சாதாரண தரப் பரீட்சையில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்பார்ப்பு!

நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்று சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்த கண்டி மகாமாயா மகளிர் வித்தியாலய மாணவி சமாதி அனுராதா ரணவக்க தெரிவித்துள்ளார். 2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன. சிறந்த பெறுபேறு இதன் அடிப்படையில், அகில இலங்கை ரீதியில் கண்டி மகாமாயா மகளிர் வித்தியாலயத்தின் மாணவி சமாதி அனுராதா ரணவக்க முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். தனது இந்த வெற்றி தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆரம்பம் முதல் ஒரு நோக்கத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் எவராலும் தமது இலக்கை அடைய முடியும். நாட்டிற்கு சிறந்த சேவையாற்றக் கூடிய ஒரு வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளார்.