இலங்கை
சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் சாதனைக்கு மேல் சாதனை படைத்த யாழின் பிரபல பெண்கள் பாடசாலை!

நேற்று வெளியான 2022 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9 ஏ சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன் 8 ஏ சித்தியை 59 பேரும், 7 ஏ சித்தியை 22 பேரும் பெற்றுள்ளனர். அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் அதேவேளை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது. வெளியான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்ஷயா ஆனந்தசயனன் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.