ஆன்மிகம்

முருகனுக்குரிய கந்தசஷ்டி விரதத்தின் மகிமை!

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் அவைகள் யாவும் நொடியில் நீங்கி, பகைவர்கள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

இந்துக்களின் இந்த வருடம் கந்த சஷ்டி விரதமானது வரும் 13 ஆம் திகதி ஆரம்பித்து 18 ஆம்திகதி சூர சம்ஹாரமும் இடம்பெறவுள்ளது. கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும். குழந்தை வரம் அருளும் கந்தசஷ்டி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம் இருக்கின்றனர்.

சஷ்டி விரத பலன்கள்
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், முருகனுக்கு உகந்த சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவேதான் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

கந்த சஷ்டி விரத மகிமை கந்த சஷ்டி விரதத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குழந்தைகளும் அனுஷ்டிக்கின்றனர். மாணவர்கள் கல்விக்காகவும், திருமணமான பெண்கள் குடும்ப நன்மைக்காகவும் குழந்தை வரம் வேண்டியும், கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

குழந்தை வரம் கிடைக்கும்
கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம் இருக்கின்றனர்.

இந்த விரதம் உண்ணாமல் இருக்க வேண்டும். கடுமையாக விரதம் இருப்பவர்கள் 7 நாள் விரதத்தில் மிளகு விரதம் கடைபிடிப்பார்கள். முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாளில் இரண்டு மிளகு, என ஏழு நாட்கள் மிளகு உண்டு விரதம் இருப்பவர்கள் உண்டு.

இளநீர் மட்டும் எடுத்து கொள்வது, பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கொள்வது, கீரை உணவு வகைகள் மட்டும் எடுத்து கொள்வது, சிலர் ஒரு வேளை உணவு உண்டு விரதமும், சிலர் காலை தவித்து மீதமுள்ள இரண்டு வேலைகள் உண்டும் விரதம் இருப்பார்கள்.

திருமண பாக்கியம்
அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்து விரத முறையை தேர்ந்து எடுத்து கொள்வார்கள். இந்த விரதத்தில் தண்ணீர் அருந்துவது தோஷம் இல்லை. போதுமான அளவு தண்ணீர் எடுத்து கொள்ளலாம்.பகலில் தூங்குவதை தவிர்ப்பது நலம். பருத்தி ஆடைகள், பச்சை மற்றும் காவி நிற ஆடைகளை விரத காலத்தில் உடுத்தி கொள்ளலாம். கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் திருமண பாக்கியம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Back to top button