இலங்கை

நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட மக்ளுக்கு நிதி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு!

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களை அஸ்வெசும திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த மேன்முறையீடுகளை பரிசீலித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டார். 7 இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து, 300,000 கூடுதல் குடும்பங்கள் அஸ்வெசும சமூக நலத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தாண்டியுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.

Back to top button