இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி செய்தி!

நாடாளுமன்றத்தில் இம்முறை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்புவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிககும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அதிபர் தரம் IIIஇற்கான நியமனம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள 4715 பேருக்கு இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது.

அதற்காமைய, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம். தற்பொழுது நாட்டில் மின்சாரக் கட்டணம் அதிரிக்கப்படவில்லை. மாதம் ஒன்றுக்கான கட்டணம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : அதிகரிக்கப்படும் சம்பளம் | Sri Lanka Government Employee Salary Increase மக்கள் மத்தியில் பிழையான ஒரு தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மின்சார கட்டணம் ஒரு போதும் அதிகரிக்கப்படவில்லை. 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட கட்டணம் ஒருபோதும் சாதாரண மக்களை பாதிக்காது. நூற்றுக்கு 17 ரூபா 18 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது பொய்யான தகவல். அரசாங்கம் என்ற ரீதியில் , மின்சார சபை நட்டத்தில் இயங்குகிறது. ஆனால் அதனை பராமரிக்க அரசாங்கத்திற்கு முடியாது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பாரிய முதல் ஒன்று செலவாகும் பட்சத்தில் அதற்கான செலவினை மின்சார கட்டணத்தில் தான் அறவிட முடியும். சாதாரண மக்களுக்கு இந்த 30 ரூபா கட்டணம் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

Back to top button