லண்டனில் இந்திய வம்சாவளியான இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு குறித்து வெளியான தகவல்!
லண்டனின் மனோதத்துவம் பயில வந்த இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், நிரந்தர முகவரி இல்லாத ஒரு இளைஞரால் கொல்லப்பட்டார். இந்திய வம்சாவளி இளம்பெண்ணான சபீதா (Sabita Thanwani, 19), லண்டனில் குடியிருப்பு ஒன்றில் தங்கி பல்கலையில் பயின்றுவந்துள்ளார். கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 19ஆம் திகதி, அதிகாலை 5.10 மணியளவில் சபீதா கூக்குரலிடும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவர, சபீதாவின் அறையிலிருந்து வெளியே ஓடிவந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து பொலிசார் அங்கு வந்தபோது, சபீதா கழுத்தறுபட்ட நிலையில் போர்வைகளின் கீழ் கிடப்பதைக் கண்டுள்ளார்கள். மருத்துவ உதவிக்குழுவினர் சபீதாவைக் காப்பாற்ற முயன்றும் பலனின்றி காலை 6.00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார் அவர். தீர்ப்பு திகதி அறிவிப்பு பொலிசார் கொலையாளியைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், தோட்டம் ஒன்றிலிருந்த ஷெட் ஒன்றில், தார்பாலினுக்குள் தூங்கிக்கொண்டிருந்த Maher Maaroufe (23) என்னும் நபர் சிக்கினார். பொலிசார் அவரைக் கைது செய்ய முயலும்போது, Maher, அவசர உதவிக்குழுவினர் ஒருவரையும் தாக்கியுள்ளார். இந்நிலையில், Maher தான் சபீதாவைக் கொலை செய்ததை Old Bailey நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சபீதா கொலை செய்யப்படுவதற்கு முன், சபீதாவும் Maherம், காதலித்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.