இலங்கை

தமிழர் பகுதி ஒன்றில் உருவாக்கப்பட்ட மிகப் பிரமாண்ட கிறிஸ்மஸ் மரம்!

முல்லைத்தீவில் உள்ள உடையார் கட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மர திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் (23-12-2023) நடைபெற்றுள்ளது. நேற்றிரவு 8.00 மணியளவில் உடையார்கட்டு பங்கு மக்களின் கைவண்ணத்தில் 50 அடி உயரம் கொண்ட கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் திறந்து வைத்துள்ளார். குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், துறவியர்கள், பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 50 அடி உயரம் கொண்ட கிறிஸ்மஸ் மரம் ஒவ்வொருநாளும் மாலை 6.00 மணிக்கு பின்னர் மக்கள் சென்று பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Back to top button