ஒன்று

முதலாம் இலக்கத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்!

வாழ்க்கை பல சுவாரஸ்யங்கள் நிறைந்தது பல திருப்பங்கள் நிறைந்தது, எம் ஒவ்வொருவருக்கு இடையிலும் பல வித்யாசங்கள் உள்ளன,ஆனாலும் எதோ ஒரு புள்ளியில் எல்லோரும் ஒன்றாகிவிடுகிறோம்.

பிறந்த எண்ணின் படி குணநலன்கள் ஒத்துப்போவதை பல இடங்களில் உணர்ந்திருப்பீர்கள் ஜோதிட ரீதியாக பார்க்கும் பொழுது ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.

நீங்கள் முதலாம் எண்ணில் பிறந்தவரா?

தமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படும் முதலாம் இலக்கத்தில் பிறந்தவர்களின் குணநலன்களை இப்போது பார்க்கலாம்,

அதாவது 1, 10, 19, 28 போன்ற தேதிகளில் ஒருவர் பிறந்திருந்தால் அவர் 1ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவராவார்.

பொதுவான குண அமைப்பு எப்படி?

வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். சூரியனை போல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும்.

மரியாதை தான் இவர்களுக்கு முக்கியம். மரியாதை இல்லாத இடத்தில இருக்க விரும்ப மாட்டார்கள். இவர்கள் சரியான அழுத்தக்காரர்கள். வீட்டுக்கு செய்வதை விட ஊருக்கு அதிகம் செய்வார்கள். தெய்வ காரியங்களில் சிலர் அதிகமாக ஈடுபடுவதும் உண்டு. பிறரை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியை கொண்டு இருப்பார்கள்.

இவர்கள் யாரையும் சார்ந்து இருக்க விரும்ப மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களின் உதவியையும் அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். எப்போதும் தன் சொந்த முயற்சியில் செயல்படவே விரும்புவார்கள். யாருடைய பணமாவது இவர்களின் கைகளில் புழங்கி கொண்டே இருக்கும். சுதந்திர எண்ணம் கொண்டவர்களதாலால் யாருக்கும் எளிதில் அடிபணிய மாட்டார்கள்.

வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் அளிப்பார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர்.

முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.

தமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள்.

தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள்.

இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள்.

வயது, அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம் கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக திகழ்வார்கள்.

உடல் அமைப்பு : கண்ணாடி அணிய நேரிடுமாம்

முதலாம் எண்ணில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும், பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான பலவீனம் இருக்கும். கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.

வாழ்க்கை: இளமையில் அடிக்கடி காதல்…..

முதலாம் இலக்கத்தில் பிறந்தவர்கள் அதிக உடையவர்கள். ஆகையால் இளமையில் அடிக்கடி காதல் வயப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அனேகமாக இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். கூட்டுக் குடும்பத்தை விட எதிலும் தனித்து வாழ வேண்டும் என்பதே இவர்களின் விரும்பம். திருமண வாழ்க்கையில் சில நேரங்களில் கவலைகளை உண்டாக்கும். அனுசரித்து நடக்கக்கூடிய வாழ்க்கை துணை வாய்த்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை அமைதியானதாக இருக்கும்.

பொருளாதாரம் : சீரான பொருளாதார நிலை!

முதலாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை ஒரே சீராக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையையும், உயர்தரமான ஆடை அணிகலன்கள் அணிவதையுமே விரும்புவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். கடன்கள் அதிகம் ஏற்படாது. ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

தொழில் : அரசு வேலை அமையும்!

வாழ்வில் அதிகம் சம்பாதிக்கும் திறமை, நல்ல உயர்வான பதவிகள், பலரை நிர்வாகிக்கும் பொறுப்பு யாவும் அமையும். அரசியல் சம்மந்தப்பட்ட துறைகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும். அரசு வேலை இவர்களுக்கு அமையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு அதிகாரமிக்க பதவிகளை அடைவார்கள். தேவை யற்ற எதிர்ப்புகளும் இருக்கும்.

யார் நண்பர்கள்? யார் பகைவர்கள்?

இவர்களை அனுசரித்து நடப்பவர்கள் மட்டுமே இவர்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும். 2,9,3 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நண்பர்களாகவும் 4,5,7,8 ஆகிய எண்களில் இவர்களுடன் ஒத்து பழக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல நட்புகள் கிடைக்கும்.

சூரியனுக்குரிய காலம் இவர்களுக்குரிய காலமாக கருதப்படுகிறது

ஒவவொரு ஆண்டும் ஆங்கில வருட ரீதியாக ஜீலை 22 முதல் ஆகஸ்டு 22 தேதிவரை சூரியனுக்குரிய காலமாகும். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குடையது.

சூரியனுடைய திசை கிழக்கு. பிரார்த்தனை செய்யும் இடம், பூஜை அறை, சமையல் அறை போன்றவை சூரியனுக்குரியவை. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் கிழக்கு பக்கமாக தொடங்கினால் அற்புதமான நற்பலனை அடையலாம்.

அதிர்ஷ்ட கல்
எண் 1ல் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட கல்லாக மாணிக்கத்தை செப்பு உலோகத்தில் பதித்து அணிய வேண்டும்.

பரிகாரங்கள்

முதலாம் பிறந்தவர்கள் சூரிய தேவனுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி -1,10, 19, 28

நிறம் – இளஞ்சிவப்பு, மஞ்சள்

தெய்வம் – சிவன்.

சுபம்.

Back to top button